ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார்!
தமிழக அரசு சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு நடத்திய பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக்கான உரிமை சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளன என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ராஜாராமன் எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள ஆசிரியர் கல்வித் தேர்வில் ஆசிரியர் நியமனத்துக்கு குறைந்தது 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மீறி தமிழக அரசு 55 சதவீதமாகக் குறைத்ததுடன் ‘வெய்ட்டேஜ்’ என்ற புதிய நிபந்தனையை அறிமுகப்படுத்தி 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பட்டப் படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப் பெண்களுக்கு முறையே 10 சதவீதம், 15 சதவீதம், 15 சதவீதம் மதிப்பெண் வழங்கி யுள்ளது.
இவை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக் கான உரிமை சட்டத்தின் பிரிவுகளை மீறிய நடவடிக்கையாகும். எனவே, தேசிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும்படி தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது

Comments
Post a Comment