ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!!
விழுப்புரம்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர். கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி எழுத்து தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது.
சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரப் பெற்றுள்ளது. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் (ஒரு விண்ணப்பம் ரூ.50 விலை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 11 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வரவழைத்து, நேற்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரி பார்த்து பெறும் இடத்தில், அதிகமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருவோர் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையிலும், சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பம் பெறுவதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment