TET Article : என் ஆசிரியர் கனவையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்- ஒரு ஆசிரியையின் கண்ணீர் குமுறல் என் பெயர் ஆண்டாள், வயது 40, ஊர் ஓசூர் விவசாய கூலி செய்யும் ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்தேன்.. 1992 ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படித்து கொண்டிருந்தேன் திடிரென அப்போதைய அரசு அப்ருவல் இல்லாத நிறுவனம் என்ற பெயரில் எங்கள் நிறுவனத்தில் படித்த மாணவர்களின் படிப்பினை ரத்து செய்தனர் அன்றே இறந்திருப்பேன் இருந்தாலும் என் ஆசிரியர் கனவு தடுத்தது... பல்வேறு சூழ்நிலைக்கிடையில் மறுபடியும் கஸ்டப்பட்டு D.T.Ed.,B.Litt.,MA படித்தேன் .. தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக என் இரண்டு குழந்தைகளையும் தன்னந்தனியே தவிக்கவிட்டு அல்லும் பகலும் அயராது படித்து தாள் 1ல் 13TE33100141- 110 மதிப்பெண்ணும் தாள் 2ல் 13TE33200122- 98 மதிப்பெண்ணும் பெற்றேன்.. எங்கள் ஊரே என்னை பாராட்டியது, சந்தோச சாரலில் இருந்த என் குடும்பத்திற்க்கு பின்னால் வரப்போகும் வெய்ட்டேஜ் என்னும் விசத்தை பற்றி தெரியவில்லை... பின் வெய்ட்டேஜ் ஜி.ஓ 71ஆல் எனக்கு இரண்டு தாள்களிலும் பணிநியமன பட்டியலில் இடம்பெறவில்லை. அன்றிரவே தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய துணிந்தேன் ஆனால் முடியவில்லை அன்றும் என் உயிராக நின்னைக்கும் ஆசிரியர் கனவு தடுத்து விட்டது... மொத்ததில் சொல்லப்போனால் என் ஆசிரியர் கனவையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.. தினமும் கண்ணீரிலே தலையணைகள் நனைகின்றன... நான் என்ன பாவம் செய்தேன் ... நான் பிறந்தது குற்றமா?? இல்லை படித்தது குற்றமா?? இல்லை ஆசிரியர் பணியை லட்சியமாக கொண்டது குற்றமா?? என் ஆசிரியர் கனவை நிறைவேற்ற எத்தனை வலிகள்... இறைவா என்னையும் என்னை போன்றோரை காப்பாற்ற வழியே இல்லையா???? Article by P.Rajalingam Puliangudi...

Comments

Popular posts from this blog