PGTRB: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின்விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டவர்கள் மீண்டும் அழைக் கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment