சி-டெட் (CTET) தேர்வு முடிவு வெளியீடு
கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்திய பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
சி-டெட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடத்தியது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 7 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், சி-டெட் தகுதித்தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments
Post a Comment