முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. 

அதன் மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது:மாநிலத்தில் 100 அரசு பள்ளிகள் மேல் நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட 900 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பதவி உயர்வு மூலமும் 200 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. 

இந்த 1100 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அரையாண்டு தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பிற்கு முன்னதாக இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும், என்றார்.

Comments

Popular posts from this blog