ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு
ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் <ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது. நிய மனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒரு வர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொண்டனர்; இன் னும் பல ஆசிரியர்கள், பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
கிராமப்புறங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர், போதிய கணினி பயிற்சி இல்லாததால், இச்சான்றை பதிவிறக்கம் செய்யாமல் தவித்ததாக கூறப்படுகிறது; இன்னும் சிலர், "பிரவுசிங்' சென்டர்களுக்கு சென்று, பதிவிறக்கம் செய்ய முயற்சித்தும், தகுதி சான்று கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தகுதி சான்றை பதிவிறக்கம் செய்ய முடியாத ஆசிரியர்கள் பலர், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்; பதிவிறக்கம் வாயிலாக சான்று கிடைக்காதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக தகுதி சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment