வரும் 30, 31ம் தேதிகளில் "தலைமை ஆசிரியர்" கலந்தாய்வு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்த பள்ளி களில், தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, வரும், 30ம் தேதியும், தற்போது இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் (உயர்நிலைப் பள்ளி) பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, 31ம் தேதியும் நடக்கிறது.
இணையதள வழியில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், காலை, 10:00 மணி முதல், கலந்தாய்வு நடக்கும். மேலும், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், 450 முதுகலை ஆசிரியரை, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment