டிசம்பர் 21ல் எழுத்து தேர்வு குரூப்-4 பதவியில் 4963 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்றுவெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தேர்வுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக்கட்டணம் செலு த்த வேண்டும். தேர்வு கட்டணங்களை செலுத்த நவம்பர் 14ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12ம் தேதி இறுதி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடைபெறும். இத்தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog