தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்
தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஒரு லட்சத்து 14 ஆசிரியர்கள் பிளஸ்–2 மற்றும் அதற்கு கீழ் தகுதி உடையவர்கள் என தெரிய வருகிறது.
கல்விக்கான மத்திய மாவட்ட தகவல் திட்டம் மூலம் 2013–14 சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 80,659 ஆசிரியர்கள் பிளஸ்–2 கல்வி உடையவர்கள் என்றும், 33,679 ஆசிரியர்கள் இடை நிலை கல்வி (10–ம் வகுப்பு) கல்வி தகுதி பெற்றவர்கள் என புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 391 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 12 பேரும் உள்ளனர். எம்.பி.எல் மற்றும் பி.எச்.டி டாக்டர் தகுதி 37,624 பேர் தகுதியுடன் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
பிளஸ்–2 படித்து 2 வருடம் ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 1 முதல் 5–ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் பணி செய்து வருகின்றனர். 20 வயதிற்கு முன் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் தகுதி பெறுகின்றனர்.
உயர் கல்வி எனும் பட்டப்படிப்பு படிக்காமலேயே 1 முதல் 5ம் வகுப்புகளுக்கும் தொடக்க கல்வி எனும் அடிப்படை கல்வியை மாணவர்களுக்கு கற்று தரும் பணியில் ஒரு லட்சத்திற்கு மேலான ஆசிரியர்கள் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment