TNTET - வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 இன்று தீர்ப்பு வழங்கப்படயிருக்கிறது....
வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
தமிழகத்தில்ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் 'வெயிட்டேஜ்' முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள்கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள்தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியானதேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை'என்று வாதாடினார்.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பலர் ஆஜராகி, கடந்த 2000ம்ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள்படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க்பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்றுவாதாடினார்கள்.
இதே போன்று 5% தளர்வு குறித்து ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதற்கிடையில் இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாயின.
வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை(22..09.14) காலை தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இத்தீர்ப்பினை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுநியமன கலந்தாய்வில் கலந்துக்கொண்ண்டவர்களும், அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களும் பரபரப்போடு எதிர்நோக்கியுள்ளனர்
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment