TET Weightage முறைக்கு எதிராக 14ஆம் நாள் போராட்டம்! (05.09.2014 Status)
டெட் வெயிட்டேஜ்முறைக்குஎதிராகஇன்று14ஆம்நாள்போராட்டம்நடைபெற்றது.இதில்1000க்கும்மேற்பட்டதேர்வர்கள்கலந்துகொண்டனர்.போராட்டத்தில்கலந்துகொண்டவர்கள்தமிழகதேர்தல்ஆணையஅலுவலகத்திற்குஎதிராககூடிகோஷமிட்டனர்.பிறகுதமிழகதேர்தல்ஆணையஅலுவலகத்திற்குள்சென்று,அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு” தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ”வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் வழங்கியது என்பதால் அங்கு சென்று தான் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து டெட் தேர்வர்கள் பேரணியாக இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்ல துவங்கினர். அப்போது காவல்துறை பேரணி செல்ல முறையாக அனுமதி பெறப்படாததால் தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டும், தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியவாறும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் போராடுபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடைபெற்றது. இதில் தேர்வர்கள் அணிந்து வந்த துணிகள் கிழிந்து காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வர்கள் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. மணி அவர்கள் திருமண மண்டபத்தில் தேர்வர்களை சந்தித்து ”தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என கூறி ஆறுதல் வழங்கினார். தற்போது 7 மணி அளவில் தேர்வர்கள் விடுவிக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். நாளை மீண்டும் 15ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment