Flash News: அரசாணை 71 வழக்கின் சுறுசுறுப்பான வாதமும் ; அரசு தரப்பின் அதிரடி பதிலுரையும்... 

இன்று காலை 11 அளவில் GO 71, 5% தளர்வு மதிப்பெண் குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு. அக்கினிகோத்திரி அவர்களும் திரு. சுந்தரேஸ்வர் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அதன் விவரம் பின்வருமாறு.. 

ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன... ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்... 

பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது.. வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார். 

அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்.. மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி அவர்கள் 5%தளர்வானது, அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ... 

இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்.... பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை... பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை... மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி அவர்கள் ஏற்றுக்கொண்டார்... 

இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது... அரசாணை மாற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது... இன்னும் பல முக்கிய தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்..

Comments

Popular posts from this blog