வழக்குகளை
விரைந்து முடிக்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு.
ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறைகளை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ளவழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை கூறியது: பணி நியமனத்தில் தகுதிகாண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.தொடர்ந்து 19-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்குகளின் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
தற்போது வழங்கப்படும் பணி நியமனங்கள் இந்த வழக்குகளின் தீர்ப்புக்கு உள்பட்டது. எனவே இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி தலைமை நீதிபதி அலுவலகத்தில் மனு அளித்தோம் என்றார் அவர்.

Comments
Post a Comment