ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62 ஆயிரம் பேர் உரிய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும்கூட, தகுதிகாண் மதிப்பெண் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தகுதிகாண் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளன. எனவே தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog