பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நாளை முதல் கலந்தாய்வு
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச்
செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3) தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம்.
கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment