ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்-MalaiMalar News அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது. கூட்டத்திற்கு பள்ளிகல்விதுறை அமைச்சர்கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர்எம்.பி. செங்குட்டுவன்,அரக்கோணம் எம்.எல்.ஏ.சு.ரவி, மாவட்ட செயலாளர்என்.ஜி.பார்த்திபன்,அரக்கோணம் ஒன்றியகுழு தலைவர் பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.அனைவரையும் நகரசெயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர்கே.சி.வீரமணி பேசியதாவது:–அரக்கோணம் நகரமன்றதலைவர்பதவிக்கு போட்டியிடும்எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாகசென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3ஆண்டு சாதனைகளை கூறிவாக்குகள் சேகரிக்கவேண்டும்.ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிகவாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள்தான் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது.நகரமன்ற இடைத்தேர்தலில் அரக்கோணம் நகரத்தில் அ.தி.மு.க. அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

Comments

Popular posts from this blog