ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம்செய்யும் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும்
பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழாசிரியர் முன்னணி பொறுப் பாளர் சங்கரநாராயணன், பேராசிரியர் தொ.பரமசிவன் ஆகியோர் நெல்லை யில் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பின்பற்றப்படும் குறைபாடான நடைமுறைகள், பணிவேண்டி காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது. தகுதி தேர்வு முதல் பணிநியமனம் வரை அனைத்தும் முரண்பாடுகளுடன் குழப்பம் நிறைந்தவையாக உள்ளன.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் தகுதி சான்றை வழங்க வேண்டும். அதன்பிறகே பணி நியமனம் குறித்து தெரிவித்திருக்க வேண்டும். இதிலிருந்தே குழப்பம் தொடங்கியுள்ளது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு பணி நியமனம் செய் யக் கோரி இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
வெயிட்டேஜ் அடுத்த முறை படித்து சிறப்பாக தேர்வு எழுதும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. 17 வயதில் அவர் என்ன மதிப்பெண் எடுத்தார் என பார்ப்பது பின்னுக்கு தள்ளப்பட்டவர் மேலே வரக்கூடாது என்பது போல் இந்த பணி நியமன முறை உள்ளது. எனவே தகுதியானவர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ள பணி நியமன முறையை மாற்ற வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.
தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம்செய்யும் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment