வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் நியமனம்.
தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள் ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபிதா வெளி யிட்ட உத்தரவு:
தமிழகத்தில் 1197 அரசு மேல்நிலைப் பள்ளி களில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடந்த 1999&2000மாவது ஆண்டில்தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களில் பலர் பி.எட்., கல்வித் தகுதி இல்லாத போ திலும் இவர்கள் பணி செய்த காலத்தைகருத் தில் கொண்டு மனிதாபி மான அடிப்படையில் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பின்னர் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த சிறப்பு போட்டித் தேர்விற்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் தேர்ச்சி சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 50 சதவீதம் மதிப்பெண்கள் பெறாத கணினி ஆசிரியர்களுக்கு 2வது முறையாக கடந்த 24.1.2010 அன்று சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேர்விலும் தேர்ச்சி பெறாத 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த பணி நீக்கம் தொடர்பாக வும், பிஎட் படித்த கணினி ஆசிரியர்கள் சார்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.இந்த பணியிடங்களை பி.எட் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இந்த பணிக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அதே நேரத்தில் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பி.எட்., கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் கிடையாது.
வருங்காலங்களில் உருவாகும் கணினிஆசிரியர் பணி காலியிடங்களை தமிழக அரசின் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment