வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடந்த மாதம் பட்டியல் வௌ�யிடப் பட்டது. அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இவர்கள் பேரணிநடத்தினர். பேரணி, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது. அப்போது, பேரணியில் கலந்துகொண்ட, நாகை மாவட்டம் சீர்காழி ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (29), சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் விரிவாக்கம் கபிலன் (29), சேலம் வீரகநல்லூர் செல்லத்துரை (31), திருவிடை மருதூர் கார்த்திக் (29) ஆகிய 4 பேரும் குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்கினர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வயிற் றில் இருந்த பூச்சிகொல்லி மருத்தை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். தற்போது, அவர்கள் அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Comments

Popular posts from this blog