மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது - தினகரன் மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், 4 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். எனினும் அரசிடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினா காந்தி சிலை முன்பு நேற்று காலை கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கமிட்டனர். தகவல் அறிந்து மெரினா போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Comments

Popular posts from this blog