தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்.
இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில் நடக்க உள்ளது.
கல்வி துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான புதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்.

Comments
Post a Comment