ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை
ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யஇன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப் பட்டன.
இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய வில்லை. இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
Post a Comment