TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்-puthiyathalaimurai
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கல்வி முறையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றம் காரணமாக மதிப்பெண் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக பதவி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறை கூறினர். புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த முறையால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்கப்படுகிறது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment