TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்.
3-வது நாளாக உண்ணாவிரதம்
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment