இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் வெளியீடு-Dinamani
ஆசிரியர் தகுதித் தேர்வின், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 592 பேரின் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) விவரங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேரும், இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேரும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண்(வெயிட்டேஜ் மதிப்பெண்) கணக்கிடப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை இந்த மையங்கள் செயல்படும். இங்கு தகுதிகாண் மதிப்பெண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் தகுதிகாண் மதிப்பெண் விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் போக, இந்தப் பட்டியலில் புதிதாக யாராவது இடம்பெற்றிருந்தால் அவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளத
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment