'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை' 'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை. எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார். 90 சதவீதம் : இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. இதில், 1,000 பேர், தங்களது சொந்த மாவட்டங்களில், பணி நியமனம் பெற்றதாக, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது. மொத்தம் உள்ள, 14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான் உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள், வேறு வழியில்லாமல், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog