ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி.,காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 10ம் தேதி, 10,500 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 1,400 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்பின், தேர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்க வேண்டும். இதன்பின் தான், பணி நியமன பணியை, பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள முடியும். ஆனால், தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் முடிந்தும், தேர்வு பெற்றவர்களின் ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை.இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதுவரை, டி.ஆர்.பி.,யிடம் இருந்து ஆவணங்கள் வரவில்லை; வந்தால் தான், பணி நியமனம் குறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். விரைவாக, ஆவணங்களை வழங்கினால், இந்த மாதத்திற்குள்ளாகவே, அனைவரையும் பணி நியமனம் செய்து விடுவோம். இவ்வாறு,அந்த அதிகாரி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog