ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 906 ஆசிரியர்களுக்கு ஆணை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது.
முதல் நாளன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது.
முதல் நாளில் 906 முதுகலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்துகொண்ட 29 பேரில் 4 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
சென்னையில் மாபெரும் பேரணி....
ReplyDeleteபாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
கோரிக்கைகள்
1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..
2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..
3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...
இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...
முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
Contact :
Rajalingam Puliangudi-
95430 79848
Selladurai - 9843633012
Paramanantham - 98428 74329
Kapilan - 909201 9692