டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்?
நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீத
மதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு சோதனைகளும், தடைகளும் வருகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுக்கு பின் பல்வேறு காரணங்களுக்காக தொரடப்பட்ட வழக்குகளில் சிக்கி, தேர்வு முடிவுகளை அறிவிப்பதிலும், தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடுவதிலும் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.
விடைத்தாள் வழக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்கு என டிஆர்பி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் வழக்குகளை சந்திக்க வைக்கின்றன.
இதனால் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் நியமன நடைவடிக்கைகள் முழுமை பெறாமல் முடங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான வழக்குகளுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டு, ஒருவழியாக ஆசிரியர் நியமனத்திற்கான தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை ஜெயகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ&க்கு அதிகாரம் அளித்துள்ளது. அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க அரசுகளை அனுமதிப்பது சட்டவிரோதமானது. எனவே, ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள் ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், பதில் கிடைத்து அடுத்த உத்தரவு வரும் வரை புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தகுதி தேர்வு நடந்த நிலையில், ஒரு ஆண்டு கடந்த பின்னரும் ஆசிரியர் நியமனம் இழுத்தடிக்கப்படுவதால், அடுத்த தகுதி தேர்வு அறிவிப்பு வெளியாவதும் தாமதமாகி வருகிறது.
இதனால், பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் திறந்து இரண் டரை மாதம் கடந்த நிலை யில், விரைவில் காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. பல பள்ளிகளில் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் கவலையில் உள்ளனர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment