இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்
"இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்."
இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது.
தயார் நிலையில்...: டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும், குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி, நிவாரணம் பெறலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு : இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாமும், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. குறை தீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின், தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா? : பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. எனவே, இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment