புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களை பணி நியமனம்செய்வதற்கான கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது. ஆசிரியர்கள் தேர்வு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in–ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது. 

அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. 

நாளை தொடங்குகிறது முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 30–ந் தேதியும் (நாளை), வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31–ந் தேதியும், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) செப்டம்பர் மாதம் 1–ந் தேதியும், (வேறு மாவட்டத்திற்கு) 2–ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 3–ந் தேதியும், (வேறு மாவட்டத்திற்கு) 4, 5–ந் தேதிகளும் கலந்தாய்வு நடக்கிறது. 

சென்னையில் மைலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூரில் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சீபுரத்தில் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் இந்த கலந்தாய்வு நடக்கிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog