1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 அல்லது 5 பள்ளி மேல்நிலையாகவும் 2 உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர வாய்ப்பு உள்ளது. மேல்நிலைக்கு தலைமை ஆசிரியர் உட்பட 10 புதிய காலியிடமும், உயர்நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 6 புதிய ஆசிரியர்களும் என, 1,300 பேர் நியமிக்கப்படுவர்.
கவுன்சிலிங் மூலமே தரம் உயரும் பள்ளிகளின் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க திட்ட மிட்டுள்ளது. அதே நேரத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டம் இல்லாத பட்சத்தில் மாறுதல் கவுன்சிலிங் ஆக., இறுதி வாரம் அல்லது அடுத்தமாதம் நடத்தப்படலாம் என கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment