தமிழகத்தில் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-Dinamalar
'நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள்
விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,''என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது:
அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது.கல்விக்குயில்பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன.கல்விக்குயில்இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,என்றார்.-
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment