SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477பேர் எழுதினர்.தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் தேர்ச்சி பெற்ற 933 பேருக்கு ஜூலை 1, 2-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன.திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம்.புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16-ம் தேதி நடத்தப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், தன்விவரக்குறிப்பு, அடையாள படிவம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் இதற்கு வரத் தேவையில்லை.சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள்தங்கள் சார்பில் யாராவது ஒருவரை பங்கேற்கச் செய்யலாம். இதற்காகவிண்ணப்பதாரர் கையெழுத்திட்டு வழங்கிய அதிகார கடிதத்தை சான்றிதழ் சரிபார்ப்பின்போது அந்த நபர் சமர்ப்பிக்க வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment