M.Ed: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைதூரக்கல்வி மையம் மற்றும் அதன் கல்வி மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் இணையத்தில் ( www.bdu.ac.in/cde) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். விண்ணப்பம் மற்றும் கல்வி மையங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24-ந் தேதி நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி மைய இயக்குநர் கே.ஆனந்தன் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog