பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்.
*2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை.
*TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும்.
* மன்ற கோரிக்கையை, இந்த அவையில் நானும் மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்துரைத்ததை ஏற்று, அந்தச் சலுகை வழங்கப்ட்டது. ஆனால் 2013 லிருந்துதான் அந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 2012 ல் அந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். இந்தச் சலுகை இல்லாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடிய நிலை இல்லை. எனவே 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
*சிபிஎஸ்இ தரத்திற்கு தமிழக பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
*தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.பள்ளிகளாக வேகமாக மாறி வரக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கின்றோம். சென்ற ஆண்டு மட்டும் 499 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழ்நாட்டில் வந்திருக்கின்றது. அதில் சென்னையில் மட்டும் 122 பள்ளிகள். இப்படியே போனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழே தனியார் பள்ளிகள் இருக்குமா என்ற ஒரு சந்தேகமும் இருக்கின்றது. இதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம் ஏன் சி.பி.எஸ்.இ.க்கு போகின்றோம் என்றால், இன்று இந்திய அளவிலே ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களுக்கு நடைபெறக்கூடிய நுழைவுத் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.தமிழகத்திலிருந்து நம்முடைய பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2.5 விழுக்காடு மட்டும்தான் ஐ.ஐ.டி.யில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் இங்கே தமிழகக் கல்வித் துறை, பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை, உதாரணமாக படைப்பாற்றல் கல்விமுறை, ஏ.எல்.எம். போன்ற திட்டங்களையெல்லாம்.அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கும் மேலாக, கூடுதலாக சி.பி.எஸ்.இ.க்கு இணையாக நம்முடைய அரசுப் பள்ளிகளினுடைய பாடத்திட்டங்களை அதிகரிப்பதற்கு இன்னும் விரிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
*புதிய குடியிருப்பு பகுதிகளில் தேவையான அளவு பள்ளிகள் மற்றும் நூலகங்கள்தமிழகத்தில் புதிய குடியிருப்புப் பகுதிகள் ஏற்படக்கூடிய பகுதிகளிலே, உதாரணமாக சென்னையிலே, செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற இடங்களில் புதிய குடியிருப்புகள் வருகின்றன. ஏராளமான மக்கள் அங்கே குடியேறுகிறார்கள். அந்தக் குடியிருப்புப் பகுதிகளில் அந்த மக்கள் தொகைக்கேற்ப அரசுப் பள்ளிகள் அமைப்பதற்கும், அதேபோல நூலகங்கள் ஆரம்பிப்பதற்கும் அரசு ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
*.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலி பணியிடம் நிரப்பபட வேண்டும்உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனை 22 6 2014லிலே முடிவடைந்த சூழ்நிலையிலே, 302 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவர்களுக்கு உரிய பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டு, இந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
*அதேபோல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாலோசனையின் காரணமாக, ஊரகப் பகுதிகளில் ஆசிரியர்கள் செல்வதில்லை. இதைத் தவிர்ப்பதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட ஊரில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்பதை மிகக் கவனத்துடன் நாம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment