முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும்! முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது.2011-12ம் ஆண்டுக்கு, முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது. தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் இதுவரை நடைபெறவில்லை. இப்பணியிடங்கள், 2014 ஜனவரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை உத்தேசித்து, அரையாண்டுத் தேர்வுக்குப் பின், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகளுக்கு தேவையான முதுநிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.மாதம் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற அந்த ஆசிரியர் களுக்கு, மார்ச் மாதம் பொதுத் தேர்வு வரை மட்டுமே பணி வழங்கப்பட்டது.அதன்பின் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. தனியார் பள்ளிகளில் பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளிக ளில் பாடம் நடத்த ஆசிரியரே இல்லாத நிலை நீடிக்கிறது. அதுபோல், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுநிலை ஆசிரி யர்கள், ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பள்ளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, அரசு பணியும் கிடைக்காத நிலையில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2012-13ம் ஆண்டுக்கான ஆசிரியர்களே இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 2013-14ம் ஆண்டுக்கு 900 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும். அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதுநிலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog