ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல் 

ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பணிநிறைவு செய்த தலைமை ஆசிரியர் கோ.சர்வரட்சகனுக்கு பாராட்டு விழா அதன் ஒன்றியத் தலைவர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

ஆசிரியர் தகுதித் தேர்வினால் கல்வித் தரம் உயராது. எனவே, படித்த இளைஞர்கள் முறையாக அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வு, இடமாறுதல்களை நேர்மையான வகையில் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தர நிர்ணய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன், பொதுச்செயலர் க.மீனாட்சி சுந்தரம், ஒன்றியச் செயலர் ஆ.திருநாவுக்கரசு, பொருளர் க.கவியரசன், துணைச் செயலர் எஸ்.அருண்குமார், மாவட்டத் தலைவர் சா.வீரமணி, மாவட்டச் செயலர் கு.ராசராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog