புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை- முதல்வர் வழங்குகிறார்!!! 

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் படவில்லை என்று குறிப்பிட்டார். 

அதற்குப் பதில் அளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, “கடந்த 3 ஆண்டுகளில் 760 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 300 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, அரசு பள்ளிகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளால் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது” என்றார். 

அவர் மேலும் கூறுகையில், “2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 71,708 ஆசிரியர் களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 53,288 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.எஞ்சிய புதிய ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிநியமன ஆணை வழங்குவார்” என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog