இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல் - தினமணி

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 

இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Comments

Popular posts from this blog