TNTET:பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி உண்ணாவிரதம்- nakkheeran News
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் உண்ணாவிரதம் சென்னையில் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பை முதலில் (ஜனவரி 21-28) முடித்தவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.வெயிட்டேஜ் முறையில் தகுதித் தேர்விற்கு அதிக மதிப்பெண் தர வேண்டும். பதிவு மூப்பிற்கு மதிப்பெண்கள் தர வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தேவையில்லாத +2 மதிப்பெண்களை அறவே நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment