ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR
அரசுஉயர்நிலைப்பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமைஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கிலபுலமை இல்லாத ஆசிரியர்கள் மீது,ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனால்,மாணவரின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கிலவழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து ஆங்கிலவழி பள்ளி
அரசுபள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம்ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து ஆங்கிலவழி பள்ளிதுவங்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கிலவழித்திட்டம்,கடந்த கல்வி ஆண்டு முதல்,உயர்நிலைப்பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.அதற்காக,ஆங்கில வழிவகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்புமுகாம் நடத்தப்பட்டு, ஆங்கிலபோதனை எடுக்கப்பட்டது. ஆனால்,தனியார் பள்ளிகளுக்கு இணையாக,அரசுபள்ளியில் ஆங்கிலவழி படிக்கும்மாணவர்கள்,ஆங்கிலபுலமை பெற்றவர்களாக இல்லை. அதற்கு முக்கிய காரணம்,ஆசிரியர்கள்,ஆங்கில புலமையுடன் பாடம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பெயரளவில் நடத்தப்படும் ஆங்கிலவழி அரசு பள்ளிகளில்,தமிழ்வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழிவகுப்பும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான ஆசிரியர்கள், தமிழ்வழி ஆசிரியர் பட்டப்படிப்புகளை படித்துவிட்டு,தமிழில் போட்டித் தகுதித்தேர்வையும் எழுதிவிட்டு, பணியில் சேர்ந்தவர்கள்தான்.
துவக்கப்பள்ளியில்,ஆங்கில பாடங்களை எடுப்பது எளிதாக இருந்தாலும், உயர்நிலை வகுப்புகளில் ஆங்கிலவழிப் பாடங்கள் எடுப்பது சிரமம். அதனால்,ஆங்கிலஅறிவு மற்றும் புலமை இல்லாத தமிழ்வழி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆங்கிலவழி வகுப்புகளை எடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முப்பருவகல்விதிட்டம்
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகஅரசு,மாணவர்களின் புத்தகச்சுமையை குறைப்பதற்காக, தமிழ்வழி மாணவருக்கு, சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து,முப்பருவ கல்விதிட்டத்தை, ஒன்று முதல் ஒன்பதாம்வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டின் கீழ், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக்கொண்டது. அதேபோல்,ஆங்கிலவழி வகுப்புக்கும் முப்பருவகல்வி முறையை அமல்படுத்தி வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், ஆறு, ஏழு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு முப்பருவ ஆங்கிலவழிக் கல்விதிட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதற்காக, ஆங்கிலவழி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு,அவை பள்ளிக்கு அனுப்பும்பணி துவங்கிவிட்டது. முன்னதாக,ஒவ்வொரு தலைமைஆசிரியருக்கும் ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது.அதில்,மேற்கண்ட மூன்று வகுப்புக்கும், ஆங்கிலவழிக்கல்வி வகுப்பை துவங்கி, தமிழ்வழிவகுப்பு எடுத்த ஆசிரியர்களை கொண்டு,ஆங்கில வகுப்பை எடுக்க வேண்டும்.அ தனால்,கோடை விடுமுறையில்,ஆங்கிலவழி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என,கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் உத்தரவு நடைமுறைப் படுத்துவது ஒருபக்கம் இருந்தாலும்,அவை முழுமையடையாத உத்தரவாகவே உள்ளது.அரசுபள்ளிகளில் பணியாற்றும் 90சதவீத ஆசிரியர் தமிழ்வழி படித்து,ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு,ஆங்கிலவழிப் புலமை,துவக்கப் பள்ளி குழந்தைக்கு எடுப்பதற்கு மட்டுமே வாய்ப்புண்டு.
பெற்றோர்அதிருப்தி
உயர்நிலை வகுப்புக்கு ஆங்கிலபாடத்தை எடுக்க அறிவுறுத்துவது இயலாத காரியம்.அவர்களுக்கு என்னதான் பயிற்சி கொடுத்தாலும்,ஆங்கிலபுலமையின்றி வகுப்பு எடுக்க முடியாது.அவர்கள் மீது,கல்வித்துறை ஆங்கிலதிணிப்பு செய்வதால்,ஆங்கில வழியில் மாணவரை சேர்க்கவிரும்பும் பெற்றோரும்,அதிருப்தி அடைகின்றனர்.ஆங்கிலவழி புலமைபெற்ற ஆசிரியர்களைகொண்டு,ஆங்கில வழித்திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே,தனியார் பள்ளிமாணவருக்கு இணையாக,அரசுபள்ளி மாணவரும் ஆங்கிலபுலமை பெறமுடியும்.இவ்வாறு அவர்கூறினார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment