மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் காணலாம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது கட்டாயம். ஆசிரியர் தேர்வு வாரியம் பல முறை ஆசிரியர் தேர்வை நடத்தி உள்ளது. இந்த தேர்வு முன்பு அனைவருக்கும் பொதுவாக நடத்தப்பட்டது. சமீபத்தில் தனியாக சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட பி.எட். படித்த பட்டதாரிகள் பேராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. முடிவு வெளியீடு அதன்படி கடந்த மே மாதம் 21ந்தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 477 பேர் எழுதினார்கள். இவர்களின் தேர்வு முடிவு நேற்று இரவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல தேர்வுக்கான கேள்வி பதிலும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சான்றிதழ் சரிபார்த்தல் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறந்த பாட நிபுணர்களால் விடை சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog