வி.ஏ.ஓ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு :384 விண்ணப்பங்கள் நிராகரிப்பு சென்னை : வரும் 14ம் தேதி, நடக்க உள்ள, வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., வருவாய்த் துறையில், காலியாக உள்ள, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, வரும் 14ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.இதற்கு, 10 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பித்ததில், தகுதியில்லாத, 384 பேரின் விண்ணப்பங்களை, தேர்வாணையம் நிராகரித்தது. தேர்வு தேதி நெருங்கியதை அடுத்து, தகுதியான தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்கள், www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில், விண்ணப்ப பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தங்களின் பெயர், நிராகரிக்கப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை, சரிபார்க்க வேண்டும். இந்த பட்டியலிலும், பெயர் இல்லை எனில், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட விவரங்களுடன், வரும் 9ம் தேதிக்குள், contacttnpsc@ gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரிக்கு, விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog