பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு.
கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர்காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.
தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும் மேற்பட்ட இலவச நலதிட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தவேண்டிய நிலை உள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் உதவியாளர்உள்ளிட்ட காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் ஓய்வு பெறுபவர்கள் உள்ளிட்ட புதிதாக உருவாகும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும்ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாக மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும்பணிகளை பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதர
ஆசிரியர்கள் இவ்வாறு பயிற்றுவித்தல் அல்லாத பிற பணிகளை மேற்கொள்வதற்கு நாள்தோறும் அதிக நேரம் ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் பணி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் உள்ளிட்டகாலி பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாகபள்ளி கல்வி இணை இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கல்வித்துறை அலுவலகம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உதவியாளர்காலி பணியிடங்கள் விபரத்தை பட்டியலாக தயாரித்து ஜூன்23ம் தேதிக்குள் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் கிடைத்ததும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment