ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி. மேலுார் அரசு பெண்கள் பள்ளியில், ஆங்கில வழிக் கல்விக்கு, போதிய ஆசிரியர்கள் இன்றி, மாணவியர் அவதியுறுகின்றனர். இப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் இரண்டாயிரத்து ஐநுாறு மாணவிகள், 6 முதல் 12 வரை ஆங்கில வழிக் கல்வியில் 600 மாணவிகள் படிக்கின்றனர். மாணவியரின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம்பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்கும்படி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர். மாணவியர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும் என நம்பி இப்பள்ளியில் சேர்ந்தோம். இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லை, என்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்போது மாணவியர் சேர்க்கை நடப்பதால், பிறகு மாணவியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

Comments

Popular posts from this blog