காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம். 

"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார். 

அவர் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளிக் கல்வி மேம்பாட்டு குழு செயல்படுகிறது. இதன் தலைவர் கலெக்டர். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் ஆவர். இதன் ஆய்வுக்கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

மாணவர்களின் நலன்கருதி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் 15 பேர் மற்றும் 5 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான ஒப்புதல் கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி, ஒழுக்கத்தை கற்றுத்தந்து அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகளை வழங்குவர்.ஆனால் அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. 

சேவை அடிப்படையில் இப்பணியினை செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. அதில், உபரியாக இருந்த 13 பேர், நாகை மாவட்டத்திற்கு இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. 

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 29 வரை விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக். பள்ளியில் நடக்கிறது.மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கானஓவியப்போட்டி விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது. கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைக்கிறார், என்றார்.

Comments

Popular posts from this blog