ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.,1 ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "" ஆசிரியர் பணியிடங்கள் குறையாமல் இருக்க ஆங்கில வழி கல்வியை துவங்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்,'' என்றார்.

Comments

Popular posts from this blog