600 மாணவர்களுக்கு ஒரே ஒரு தமிழாசிரியர்! அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம்
அன்னுார் : அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவர்களுக்கு ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது.
அன்னுார் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி 65 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 1,750 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு 6,7 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகிறது. இங்கு பிளஸ் 1ல் கணிதம் மற்றும் உயிரியல் அடங்கிய முதல் பிரிவு, கணிதம், கணினி அறிவியல் அடங்கிய இரண்டாம் பிரிவு, கலைப்பிரிவு, முழு அறிவியல், வரலாறு, புள்ளியியல் என ஆறு பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 2வில், புள்ளியியல் தவிர்த்து ஐந்து பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 600 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் உள்ள 11 வகுப்புகளிலும் தமிழ் பாடம் உள்ளது. எனவே, ஒரே தமிழாசிரியர் 11 வகுப்புகளுக்கு தலா ஒரு முறை செல்ல மூன்று நாட்கள் ஆகிவிடும். இதனால், தமிழ் பாடத்தில் கற்பித்தலும், கற்றலும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன். வரலாறு மற்றும் பொருளாதாரம் பாடங்களுக்கு பிளஸ்1, பிளஸ் 2வில், கடந்த ஆண்டிலிருந்தே ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பிளஸ் 2 தேர்வில் கலை மற்றும் வரலாறு பிரிவு மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற முடியாமல் போனது.
பெற்றோர்கள் கூறுகையில், 'பிளஸ்2 தேர்வுதான் மிக முக்கியம். இதில் இரண்டு பாடங்களுக்கு ஆசிரியரே இல்லை என்பதாலும், தமிழுக்கு 11 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருவர் மட்டுமே உள்ளதாலும், மாணவர்களின் தேர்ச்சியும், அதிக மதிப்பெண் பெறுவதும் பாதிக்கப்படுகிறது. காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment